Friday, 13 September 2019

இந்த வார சிரிப்பு


மீபத்தில் வாட்ஸ் அப்பில் நண்பர் ஒருவர் குழுவில் பகிர்ந்த ஜோக் இது, நீங்களும் படித்து சிரியுங்கள்...

அமெரிக்காவில நம்பாளு ஒருத்தன் பல்வலி தாங்காமல் பல்லை புடுங்கலாம்ன்னு டென்டிஸ்ட் கிட்ட போனான். 

"டாக்டர் என் பல்லைப் புடுங்கனும்னுன்னா எவ்ளோ ஆகும்" னு கேட்டான். 

அதுக்கு அந்த டென்டிஸ்ட்  "1200 டாலர் ஆகும்" என்றார். 

அந்த ரேட் அவனுக்கு அதிகமாக தோணிச்சு. 

கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு அவன் அவர்கிட்ட "டாக்டர் என் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?"ன்னு கேட்டான்.

"ஒரே ஒரு வழி இருக்கு. அனஸ்தீஷியா இல்லாம வேணும்னா செய்யலாம். 300$ டாலர் குடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும்" என்றார்.

நம்மாளு, "பரவாயில்ல டாக்டர். அனஸ்தீஷியா இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்" என்றான்.

டென்டிஸ்ட் அவனோட பல்லை பிடுங்கிய போது அவன் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற அவனிடம் டென்டிஸ்ட் சொன்னார்:  "இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையுடனும்  ஒரு  பேஷண்டைக் கூட இதுவரை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நீ ஒரு கேஸ் ஸ்டடி மாதிரி.. எனவே நீ எனக்கு பீஸ் தர வேண்டாம். இந்த 500 டாலரை எனது அன்பளிப்பாக நீயே வைத்துக் கொள்" என்று தனது பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். 

மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கில் வந்த பேஷன்ட்டுடன் தனக்கு ஏற்பட்ட ஸ்வாரஸ்யமான அனுபவத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார். 

"நீங்கள் சொன்ன பேஷன்ட் காலையில் முதலில் என்னிடம் தான் வந்தான். அவனுக்கு அனஸ்தீஷியா கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன். அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவன் சீட்டில் இல்லை. ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தான். அந்த ராஸ்கல் தான் உங்களிடம் வந்திருக்கிறான் போலிருக்கு !"  என்று புலம்பித் தீர்த்து விட்டார்.

-----------------------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்

powered by Surfing Waves
------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

No comments:

Post a Comment